Thursday, November 22, 2007

PuliSadham

For the pulliyodharai mix
1) one big lemon size tamarind
2) 10 to 12 red chilies
3) 1 1/2 teaspoon dhania
4) 1 1/2 teaspoon channa dal
5) 1 1/2 teaspoon mustard
6) 1 1/2 teaspoon groundnuts
7) 1 1/2 teaspoon curry leaves
8) 1 1/2 teaspoon salt
9) 1/2 teaspoon fenugreek
10) 1/2 teaspoon turmeric powder
11) little asafoetida
12) 1/4 teaspoon crushed jaggery
13)4 Tablespoon sesame oil(nallennai)
14) Tablespoon cooking oil
15)2 cups rice

Cooking procedure
Soak the tamarind in little water.

Take thick pulp out of it and keep aside.

Cook the rice,care should be taken not to overcook the rice.It is better to cook the rice in a vessel and strain the water instead of pressure cooking.

Once the rice is cooked transfer it to a wide vessel to cool it.

Heat a teaspoon of oil in a kadai .

Fry about ten chillies(leave two for seasoning),dhania ,fenugreek and half spoon of the channa dal.

Cool this and dry grind it to a coarse powder.

Heat the remaining oil in a kadai season with mustard channa dal ,groundnuts ,the remaining two chillies and curry leaves.

Add the tamarind pulp and the turmeric powder .

Boil it for 10 to 15 minutes or untill it turns thick (close the kadai as the mixture will splash all over while boiling).

Once it turns nice thick add the jaggery and remove from fire.

Add the ground powder, salt and asafoetida.

Mix well and add to the rice and again mix well untill the rice absorbs the mixture.
Storage tips:
This rice will remain good for a day

The above mixture can be made in advance and can be stored in an airtight bottle .It can The above mix can be refrigerated to maintain the freshness.

BTW,puli sadham pudikaadhavargal irukavae mudiyadhu.adhuvum pulisadhamum poritha vadaamum, aaha besh besh romba nanna irukkum

Badam milk(in a simple way)

Ingredients:
1 cup milk-chilled
1 cup condensed milk
1 cup almonds
a pinch of cardamom powder
1 cup ice - crushed

Method: Place the almonds in a bowl and pour boiling water over. Leave for an hour.

Chop half the almonds fine and place the other half in a blender.

Place the milk, condensed milk, cardamom powder and ice in the blender too.

Blend till well mixed and serve garnished with the chopped almonds.


Note:
udamba pathukonga;indha badampaal romba kettavan, kozhuppu jaasthi,eppodhavadhu thaan kudikalam.

Krishna Sweets' Mysoorpa

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்

செய்முறை:

கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.
மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம்.


* சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது

Gulla... Rasagulla!!

ரசகுல்லா:
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை - 200 கிராம்
மைதா - 10 கிராம்
ரோஸ் எசன்ஸ் - 2, 3 துளிகள்
தண்ணீர் - 1 லிட்டர்


செய்முறை:

ரசகுல்லா:

ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும்.
உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினிகர் அல்லது எலுமிச்சையின் வாசனை போய்விடும்.
இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து சக்கை(பனீர்) மட்டும் நிற்கும்.
இந்தப் பனீருடன் மைதா மாவைச் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்து, சுமார் 10லிருந்து 7,8 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சர்க்கரையுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை கரைந்து, நன்றாகக் கொதிக்கும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
இப்போது அடுப்பை நன்றாக எரியவிட்டு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, மெதுவாக பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இதனால் கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
இப்படியே 5,6 முறை செய்வதற்குள் ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும். (ஒரேயடியாக கொதி நிலையிலேயே வைத்தால் தனியாகப் பிரிந்துவிடும்.)
அடுப்பிலிருந்து இறக்கி ரசகுல்லாக்களை தனியாக எடுத்து ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும்.